கேரள அரசியலில் இடி மின்னல்: அதிகாலையில் பினராயி விஜயன் வீடுகளில் இ.டி அதிரடி ரெய்டு; அதிகாரிகள் வாகனம் மீது தாக்குதலால் போர்க்களமானது திருவனந்தபுரம்!
விடிய விடிய நடந்த வியூகம்.. அதிரடி காட்டிய இ.டி! திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கமாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழைக்கு முன்பாகவே, அம்மாநில அரசியல் களம் இன்று அதிகாலை ஒரு மிகப் பெரிய இடி-மின்னலைச் சந்தித்திருக்கிறது. கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மிக மூத்த முகமுமான பினராயி விஜயனின் வீடுகளில், இன்று அதிகாலை 6 மணிக்கெல்லாம் மத்திய பாதுகாப்புப் படையினரின் துணையோடு அமலாக்கத்துறையினர் (ED) நுழைந்து அதிரடி சோதனையைத் தொடங்கினர். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள பினராயி விஜயனின் வாடகை இல்லம், அவரது சொந்த ஊரான கண்ணூர் வீடு, மற்றும் கோழிக்கோட்டில் உள்ள அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் இல்லம் என கேரளா மற்றும் பெங்களூரு உட்பட மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் ஏககாலத்தில் அரங்கேறின. சோதனை நடந்தபோது பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே தான் இருந்தார். நள்ளிரவு நீதிமன்ற உத்தரவும்... அதிகாலை ரெய்டும்! இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு விறுவிறுப்பான நீதிமன்றப் பின்னணி இருக்கிறது. மகள் வீணா விஜயன் மீதான இந்த அரச...