Posts

Showing posts with the label St Petersburg

புதினின் சொந்தக் கோட்டைக்குள் புகுந்த உக்ரைன் ட்ரோன் படை: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வான்வெளியில் அதிரடித் தாக்குதல்!

Image
  370-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஊடுருவல்; வரலாற்றிலேயே முதன்முறையாக மக்கள் வீடுகளுக்குள் முடங்க அவசர உத்தரவு! செயின்ட் பீட்டர்ஸ்பர்க் / கீவ்: உக்ரைன் - ரஷ்யா போர்க்களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான வான்வழித் தாக்குதலை நேற்று எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்ற சர்வதேசப் பொருளாதார மாநாடு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நிறைவடையும் அதே தருணத்தில், புதினின் சொந்த ஊரான இந்த நகரின் மீது உக்ரைன் ராணுவம் வரலாறு காணாத அளவிற்கு அசுரத்தனமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வான்வழியாக ஊடுருவி, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு வளையத்தையே உக்ரைன் படை நிலைகுலையச் செய்துள்ளது. எல்லையைக் கடந்த 370 'நெருப்புப் பறவைகள்'! கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் உள்கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைத்து வந்தாலும், நேற்று நடந்த தாக்குதல் ரஷ்ய வரலாற்றிலேயே மிகப்பாரிய ட்ரோன் ஊடுருவலாகப் பார்க்கப்படுகிறது. ர ஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி: ரஷ்ய வான் எல்லைக்குள் ஒரே நேர...