Posts

Showing posts with the label iran blocks hurmuos

உலக நாடுகளின் கழுத்தைப் பிடிக்கும் ஈரான்: ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்; டிரம்ப் எச்சரிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பதற்றம்!

Image
 உலக நாடிகளின் கழுத்தைப் பிடித்துள்ள ஈரான்: ஹார்முஸ் நீர்ச்சந்தியின் முக்கியத்துவம்! வாஷிங்டன் : மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையை உலுக்கி வரும் ஒரு மிகப்பெரிய புவி-அரசியல் யுத்தம் தற்போது அரங்கேறி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உலகிலேயே மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிரடியாக முடக்கியுள்ளது. மறுபுறம், ஈரானிய துறைமுகங்களைச் சுற்றி வளைத்து அமெரிக்க கடற்படை ஒரு மிகப்பெரிய கடல்வழி முற்றுகையை  அறிவித்துள்ளதால் , இந்த குறுகிய கடல் பகுதியில் போர் மேகங்கள் மிகத் தீவிரமாகச் சூழ்ந்துள்ளன. ஏன் இந்த 50 கி.மீ பாதை உலக நாடுகளை மிரட்டுகிறது? வரைபடத்தில் பார்த்தால் ஓமன் வளைகுடாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் வெறும் 50 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சிறிய ஜலசந்தி தான் இந்த ஹார்முஸ் . ஆனால், இதன் முக்கியத்துவம் உலக நாடுகளின் பொருளாதாரத்தையே த...